Monday, 13 April 2015

சித்திரை புத்தாண்டு புறட்டு வரலாறு:

நாரதருக்கு குடும்பம் நடத்தவேண்டும் என ஆசைவந்ததாம்,
நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் கிருஷ்ணருக்கே மனைவியாய் இருந்தனராம்.பெண்ணே கிடைக்கவில்லை என்றாராம்.
அதற்கு கிருஷ்ணர், தனது மனைவிகள் வசிக்கும் இல்லங்களுக்கு நேரில் சென்று அறிந்து வரும்படி கூறினார். அதன்படி கிருஷ்ணரின் மனைவிகள் வசிக்கும் ஆயிரக் கணக்கான வீடுகளுக்கும் நாரதர் சென்று பார்த்தார். அத்தனை வீடுகளிலும் ஸ்ரீ கிருஷ்ணர் தனது மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டு தானும் அதுபோல குடும்ப சுகத்தை அடைய வேண்டும் என்று விரும்பினார்.
அந்த எண்ணத்துடனே நாரதர் கங்கை நதியில் மூழ்கி நீராடினார். கிருஷ்ணரின் அருளால் அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. நீரில் மூழ்கி எழுந்த நாரதர் பெண்ணாக மாறி இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு அழகான சந்யாசி பெண்ணாக மாறிய நாரதரின் கையை பிடித்து அழைத்துக் சென்று திருமணம் செய்து கொண்டார்.
மண வாழ்க்கை கொஞ்சம் காலம்தான் மகிழ்ச்சியோடு சென்றது. பெண்ணாக மாறிய நாரதருக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு குழந்தை எனப் பிறந்து கொண்டிருந்தது. பெண்ணாக மாறியதால் இனி அவரை நாரதி என்று அழைப்போம். இதனால் உடல் நலம் குன்றியும் கவலையால் பீடிக்கப்பட்டும் நாரதி துன்பமுற்றாள்.
குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாமலும், நோய்க்கு மருந்தளிக்கவும் முடியாத நிலையும் ஏற்பட்டது. இப்படியே நாரதி 60 குழந்தைகளுக்கு தாயாகி விட்டார். இனியும் தாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது "குடும்ப வாழ்க்கை போதும், இதிலிருந்து என்னை விடுவியுங்கள்' என்று பகவான் கிருஷ்ணரை மனமார பிரார்த்தனை செய்தாள்.
நாரதியிடம், "பெண்ணே குடும்ப வாழ்கையின் சுகம் போதுமா? வேறு என்ன வேண்டும்?'' என்று வினவினார். அதற்கு நாரதர், ""மண வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கையென்று எண்ணி ஏமாந்து விட்டேன். என்னை இதிலிருந்து விடுவித்து உதவுங்கள்'' என்றார். அதுவரை நாரதரை மாயையில் ஆழ்த்தி இருந்த பகவான் அவரை மாயையில் இருந்து விடுவித்தார். நாரதியும் பழையபடி தம்புராவைச் சுமந்தபடி நாரதராக மாறினார்.
அப்போது நாரதர் சம்சாரக் கடலில் மூழ்கி இருந்த 60 வருடங்களில் அவருக்குப் பிறந்த 60 குழந்தைகளும் நாரதரைச் சுற்றி வந்து தங்களுக்கு ஏதாவது வழி செய்து விட்டு செல்லுங்கள் என்று கதறின. நாரதர் அவர்களை அமைதிப்படுத்த ஒரு வழி சொல்லுமாறு பகவான் விஷ்ணுவை வேண்டினார்.
அதற்கு பகவான், 60 பிள்ளைகளையும் 60 ஆண்டுகளாக இருந்து ஒவ்வொருவரும் ஓர் ஆண்டு இந்த பூவுலகை ஆண்டு சுகமாக வாழ்வார்கள் என அருளினார். அதன்படி "பிரபவ'வில் தொடங்கி "அக்க்ஷய'வில் முடியும் 60 குழந்தைகளும் வருடங்களாக மாற்றம் பெற்று பூவுலகை ஆட்சி செய்து வருகின்றனர்.
1.பிரபவ 2.விபவ 3.சுக்கில 4.பிரமோதூத 5.பிரஜோற்பதி 6.ஆங்கிரச 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவா 10.தாது 11.ஈஸ்வர 12.வெகுதான்ய 13.பிரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.சுபானு 18.தாரண 19.பார்த்திப 20.விய 21.ஸர்வசித்து 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வரி 35.பிலவ 36.சுபகிருது 37.சோபகிருது 38.குரோதிஷ 39.விஸ்வாஸுவ 40.பரபாவ 41.பிலவங்க 42.கீலக 43.ஸௌமிய 44.சாதாரண 45.விரோதிகிருது 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராஷச 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரௌத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்ரோத்காரி 58.ரக்தாஷி 59.குரோதன 60.அக்க்ஷய.
தமிழனை சிறுமைப்படுத்த எவ்வளவு கீழ்த்தரமான சிந்தனையுடன் இக்கதையை தினித்திருக்கிறார்கள்.
நாமும் கடைப்பிடிக்கிறோம்.
கேவலம் கேவலம்,
ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடத்தான் வேண்டுமா?
ஆரிய அடிமைத்தனத்தின் எச்சமே சித்திரை புத்தாண்டு.

Saturday, 2 August 2014

சண்டாளா... படவா ராஸ்கல்ஸ்களா...!

சண்டாளா... படவா ராஸ்கல்ஸ்களா...!

சண்டாளா என்று பலர் திட்டுவது உண்டு, அதே போல் படவா ராஸ்கல்ஸ் என்று சிலர் திட்டுவதும், சிலர் கொஞ்சுவதும் உண்டு. சண்டாளா, படவா ராஸ்கல்ஸ் அப்படி என்றால் என்ன...? தெரிந்துகொள்ளுங்கள் பிறகு திட்டுவதா கொஞ்சுவதா என முடிவெடுங்கள்.

பார்ப்பன பெண்ணிற்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஆணுக்கும் பிறப்பவர்கள் தான் "சண்டாளர்கள்". அக்காலத்திலேயே ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பிறந்தவர்கள் (சண்டாளர்கள்). அவர்களை தீட்டுப்பட்டவர்கள் என்று ஊரை விட்டு ஒதுக்கி வைத்து பிச்சை எடுத்து வாழ சொல்லி, விவசாயம் செய்யக்கூடாது, இரவில் நடமாடக் கூடாது என்று இச்சமுகத்தால் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இதையெல்லாம் செய்தது சாக்கடை "இந்து மதம்" தான்.

எங்கே இந்து மதத்தை தூக்கிபிடிப்பவர்களே பதில் சொல்லுங்கள், இப்போது பலர் ஜாதிமறுப்பு திருமணம் செய்துகொள்கிறார்களே அவர்களது பிள்ளைகளை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடலாமா...? கழுதை மேய்க்க விடலாமா...?எல்லாரையும் சண்டாளர்கள் என்று சொல்லலாமா...? சொல்லத்தான் விடுவீங்களா...?

உயர்ஜாதிக்காரன் வீட்டிற்கே சென்று அங்கிருபவர்களின் அந்தரங்க உறுப்பை மழித்து சுத்தம் செய்பவர்கள் பெயர்தான் "படவா".

தாயின் ஒழுக்கக் கேடால் (ஆண்கள் மட்டும் ஒழுக்கமானவர்களா...?)  முறைகேடாகப் பிறப்பவர்களின் பெயர் தான் "ராஸ்கல்".

இந்த இழிவெல்லாம் நீங்கி நாம் இப்பொழுது வாழ்கிறோம் என்றால் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் தான் காரணம். உங்கள் இந்து மதமோ, ப்ரோகிதமோ, மந்திரமோ, கடவுளோ, வெங்காய வெளக்க மாரோ காரணம் இல்லை.

நண்பர்களே நீங்கள் சண்டாளர்களா...? படவாக்களா...? ராஸ்கல்ஸ்களா...? = இந்துக்களா...?முடிவெடுத்துக்கொள்ளுங்கள்...

(நன்றி தலித் முரசு)

- தளபதி பாண்டியன்

சண்டாளா என்று பலர் திட்டுவது உண்டு, அதே போல் படவா ராஸ்கல்ஸ் என்று சிலர் திட்டுவதும், சிலர் கொஞ்சுவதும் உண்டு. சண்டாளா, படவா ராஸ...்கல்ஸ் அப்படி என்றால் என்ன...? தெரிந்துகொள்ளுங்கள் பிறகு திட்டுவதா கொஞ்சுவதா என முடிவெடுங்கள்.
பார்ப்பன பெண்ணிற்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஆணுக்கும் பிறப்பவர்கள் தான் "சண்டாளர்கள்". அக்காலத்திலேயே ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பிறந்தவர்கள் (சண்டாளர்கள்). அவர்களை தீட்டுப்பட்டவர்கள் என்று ஊரை விட்டு ஒதுக்கி வைத்து பிச்சை எடுத்து வாழ சொல்லி, விவசாயம் செய்யக்கூடாது, இரவில் நடமாடக் கூடாது என்று இச்சமுகத்தால் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இதையெல்லாம் செய்தது சாக்கடை "இந்து மதம்" தான்.
எங்கே இந்து மதத்தை தூக்கிபிடிப்பவர்களே பதில் சொல்லுங்கள், இப்போது பலர் ஜாதிமறுப்பு திருமணம் செய்துகொள்கிறார்களே அவர்களது பிள்ளைகளை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடலாமா...? கழுதை மேய்க்க விடலாமா...?எல்லாரையும் சண்டாளர்கள் என்று சொல்லலாமா...? சொல்லத்தான் விடுவீங்களா...?
உயர்ஜாதிக்காரன் வீட்டிற்கே சென்று அங்கிருபவர்களின் அந்தரங்க உறுப்பை மழித்து சுத்தம் செய்பவர்கள் பெயர்தான் "படவா".
தாயின் ஒழுக்கக் கேடால் (ஆண்கள் மட்டும் ஒழுக்கமானவர்களா...?) முறைகேடாகப் பிறப்பவர்களின் பெயர் தான் "ராஸ்கல்".
இந்த இழிவெல்லாம் நீங்கி நாம் இப்பொழுது வாழ்கிறோம் என்றால் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் தான் காரணம். உங்கள் இந்து மதமோ, ப்ரோகிதமோ, மந்திரமோ, கடவுளோ, வெங்காய வெளக்க மாரோ காரணம் இல்லை.
நண்பர்களே நீங்கள் சண்டாளர்களா...? படவாக்களா...? ராஸ்கல்ஸ்களா...? = இந்துக்களா...?முடிவெடுத்துக்கொள்ளுங்கள்...
(நன்றி தலித் முரசு) - தளபதி பாண்டியன்

Thursday, 12 June 2014

உலகில் மதங்கள் ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும்-பெரியார்

உலகில் மதங்கள் ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும்-பெரியார்
 (முஸ்லீம் மதத்தை பெரியார் ஆதாரித்தாரா? என்பது பற்றி முகநூல் மற்றும் பல இடங்களில் விவாதிக்கபட்டுக் கொண்டிருக்கிறது. அது பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து பெரியார் என்ன சொல்லியுள்ளார் என்று தேடியதில் கிடைத்த செய்தியை உள்ளது உள்ளபடி அப்படியே பதிவு செய்து உள்ளோம். வினா? நம்முடையது, விடை:- பெரியாருடையது. ஊன்றிப்படித்து உண்மையை உணருங்கள். 

வினா:-

அய்யா,மதங்கள் அனைத்தும் ஒழிய வேண்டும் என்று சொல்லும் நீங்கள்,முகமதிய மதத்தை ஆதரிப்பது ஏன்?

விடை:-

இந்து மதத்தை விட முகமதிய மதம் மேலானதே! ஏனெனறால் அதில் ஒற்றுமை சமத்துவம், விக்கிரகாராதனை மறுப்பு ஆகியவைகள் இருக்கின்றன. அந்த மதம் இன்று துருக்கி, ஆப்கானிஸ்தானும் ஈஜிப்டு (எகிப்து)முதலிய நாடுகளை ஆட்சி கொண்டு வருகின்றது இவைகளையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கித் தள்ளுவதானாலும் இந்து வாயிருப்பதின் காரணத்தால்  தீண்டப்படதாவராகவும்,காணப்படாதவராகவும்,கடவுள் சந்நிதானத்தில் நிற்கப்படாதவராகவும் இருக்கின்ற ஆறறிவு படைத்து ஆண்டவனுடைய தூய திருக்கோயிலாக அடைய சரீரத்தைத் தாங்கி நிற்கும் ஒரு மனிதன் இந்து மதத்தை விட்டு முகம்மதிய மதம் புகுந்தானானால் அப்போதே சூரியனைக் கண்ட குமரி இருட்டு பறந்தோடுவது போல் மறைந்து போகின்றதென்பது மட்டும் உறுதி!உறுதி!!உறுதி!!!

இதையாராவது  மறுக்கின்றார்களா என்று கேட்கின்றோம். மற்றபடி  மேல்லோகமும் ஆண்டவன் சன்னிதானமும்; பாவமன்னிப்பும் இந்து மதத்தை விட முகமதிய மதத்தில் மிக்க சமீபமென்றோ மிக்க சுலபமென்றோ நாம் சிறிதும் ஒப்புக் கொள்வதில்லை. தவிர இந்து மதத்தில் இருக்கின்ற ஒரு சக்கிலியோ, பறையனோ,பள்ளனோ அன்றையதினம் இந்து மதத்தை விட்டு விட்டேன் என்று சொல்லுவானானால் அவை ஒருக்காலும் தொட்டுக்கொள்ளவோ,தெருவில் நடக்கவிடவோ பக்கத்தில் வர சம்மதிக்கவோ எவரும் ஒப்புக்கொள்வதில்லை. இந்த நிலையில் உள்ள மக்களிடம் தாழ்த்தப்பட்டவர்கள் மதத்தை விட்டு விடுவதனால் மாத்திரம் எப்படி சுதந்திரமடையக் கூடியவர்களாகி விடுவார்கள்?ஆனால் மகமதியர்களாகவோ கிறத்துவர்களாவோ ஆகிவிட்டால் கண்டிப்பாக சட்டத்தில் ஆட்சேபனை இல்லை என்பதுடன் சிறப்பாக மகம்மதியர்களாகி விட்டால் சட்டத்தில் ஆட்சேபனை இல்லாத்தோடு அனுபவத்திலும் ஆட்சேபனையில்லாமல் போய் விடுகின்றது.

பொதுவாக நமது இலட்சியம் சாதி மத வித்தியாசம் ஆகிய இரண்டும் ஒழிந்து அவைகளால் ஏற்படும் மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டுமென்பதாகும். மத வித்தியாசம் ஒழிகின்ற வரையிலும் சாதி வித்தியாசம் காத்துக் கொண்டிருக்க முடியாது. ஆதலால் மத வித்தியாசம் ஒழிய பாடுபட்டு கொண்டிருப்பதுடன் சாதி வித்தியாசம் ஒழியச் செய்ய வேண்டிய காரியங்களையும் கூட செய்து கொண்டுதான் இருக்க வேண்டி இருக்கிறது. ஆகவே அம்முயற்சியில் ஒன்றுதான் நாம் இப்போது மகமதிய மதத்தை தழுவியர்களை ஆதரிப்பதும்,பாராட்டுவதுமே ஒழிய வேறில்லை
                ------------------------- தந்தைபெரியார் -“குடிஅரசு”- “03-11-1929
**************************************************************************************
வினா:-


அய்யா,ஆதிதிராவிடர்களை, இஸ்லாம் மதத்தில் சேருங்கள் என்று தாங்கள் அறிவுரை சொன்னது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது? இது பற்றி தாங்கள் கருத்து என்ன?
விடை:-

ஆதிதிராவிடர்களை நான் இஸ்லாம் மத்தில் சேருங்கள் என்று சொன்னதிற்காக ஆனேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள்.அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை சொல்வதைச் கிரகிக்கச் சக்தியும் இல்லை சிலருக்குத் தங்கள் மேன்மை போய் விடுமே- தக்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல என்னவும் ஏனெனில் மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதிதிராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை, அல்லது ஆத்மார்த்தத்திற்கேர் கடவுளை அடைவதற்கோ நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதிதிராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது,சக்தியாகிரகம் செய்வதுபோலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்

இனியும் சொல்கின்றேன் சட்டம் செய்வது இஷ்டம்,செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம் செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம் இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கும் ஆனால் ஆதித்திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ, துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கும் ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் வித்தகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? யாருக்கும் எவ்விதக்  கஷ்டமும் இல்லாமல் வேண்டுமானால் எவ்வித மனமாறுதல் கூட இல்லாமல், தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் சொன்ன ஆசையும்  அவசரமும் பட்ட ஒரு மனிதன் மாலை 5 மணிக்கு இஸ்லாம் மதக் கொள்கையை ஏற்றுக் கொண்டதால் சொல்லி, 5-30 மணிக்கு தீண்டாதவன் என்கின்ற இழிலிருந்து மீண்டும் தெருவில் நடக்க உரிமைபெற்று மனிதனாவதில் என்ன மற்றவர்கள் ஆட்சேபிக்க  வேண்டும்? கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100-க்கு 90 மக்கள் என்னென்னமோ_ அவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருந்து இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும்.
------------------------தந்தைபெரியார் -“குடிஅரசு”-02-08-1931

நன்றி தமிழ் ஓவியா

Thursday, 26 December 2013

"செவ்வாய் தோஷமும் திருமணத்தடைகளும் "

செவ்வாய்க் கிரகம் 93 லட்சம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. அவ்வளவு தொலைவாக இருக்கிற ஒரு கிரகம், இந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து, பெண்ணின் மாமியாரையும் கண்டுபிடித்து, குறிபார்த்துக் கொன்றுவிடும் என்று சொல்வது அறிவியல் உலகில் எப்படி நம்பத் தகுந்தது.

சின்னக் குழந்தைகளுக்கெல்லாம் "பால்ய விவாகம்' என்னும் பெயரில் திருமணம் செய்து கொண்டிருந்த நம் சமூகம், இன்றைக்கு 30 வயதைக் கடந்த பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாமல் ஏங்கிக் கிடக்கிறது. அன்றைக்குப் பால்ய விவாகம், இன்றைக்கு முதிர் கன்னியர் பிரச்சனை. இன்றைக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என்பதற்கு வரதட்சணை போன்ற காரணங்கள் முதன்மையாக இருக்கின்றன. இவற்றைத் தாண்டி இன்னொரு வேடிக்கையான காரணமும் இருக்கின்றது. பல பெண்களுக்கு ஜாதகத்திலே செவ்வாய் தோஷம் இருக்கின்றது. அதனால்தான் திருமணம் ஆகவில்லை என்று கூறுகிறவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

சமூகத்திலே ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்குமானால், அதே மாதிரி செவ்வாய் தோஷம் உரிய மணமகன் கிடைக்கிற வரையிலே அவள் காத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அவளுக்குத் திருமணம் செய்து விட்டால் அந்தப் பெண்ணுடைய கணவனுக்கோ அல்லது மாமியாருக்கோ உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிடும் என்கிற ஓர் அச்சம் இருக்கிறது. அதற்கு விஞ்ஞானப் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை. ஆனாலும் மக்களிடையே அப்படியொரு ஆழமான நம்பிக்கை இருக்கிறது.

செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று சொன்னால், புதன் தோஷம், வியாழன் தோஷம் எல்லாமும்கூட இருக்க வேண்டும். இன்னமும் சொன்னால் நெப்டியூன் தோஷமும்கூட இருக்க வேண்டும். அவற்றுக்கெல்லாம் தோஷமில்லை. செவ்வாய் கிரகத்துக்கு மட்டும்தான் தோஷம் இருக்கிறது என்று நம்புவதற்கு என்ன காரணம்? செவ்வாய் கிரகத்தின் மீது நம்முடைய தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமன்று, உலகம் முழுதும் இருக்கிற மக்களுக்கும் அச்சம் இருக்கிறது. பல நாடுகள் செவ்வாயைக் கண்டு அஞ்சுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளோ, செவ்வாயை நல்ல நாள் என்று கருதுகின்றன. எனவேதான் அமெரிக்காவிலே பல நேரங்களிலே செவ்வாய்க்கிழமையில் தேர்தலை வைக்கிறார்கள். எப்போதும் தேர்தல் வைக்கிறபோது ஒருவருக்கு அது நல்ல நாளாகவும் அதுவே இன்னொருவருக்குக் கெட்ட நாளாகவும் அமையும். இருவரும் வெல்ல முடியாது. எவ்வாறாயினும், ஒரு நாளைக் கெட்ட நாள் என்று நம்புவதும், அதையே நல்ல நாள் என்று நம்புவதும் எல்லாம் மூடநம்பிக்கைதான்.

இப்படி ஒரு நம்பிக்கை, ஒரு அச்சம் ஏன் வந்தது என்று கேட்டால், மற்ற கிரகங்களைப் போல அல்லாமல் செவ்வாய் கொஞ்சம் சிவப்பாகத் தெரிவதுதான் அதற்கான காரணம். அதனால்தான் பெயரையே செவ்வாய் என்று நாம் வைத்திருக்கிறோம். அந்தக் கிரகத்தைச் சுற்றிக் கூடுதலாகத் தூசுகள் இருக்கிற காரணத்தினாலே, அது சிவப்பாகத் தெரிகிறது என்பதுதான் அறிவியல் தருகிற செய்தி. ஆனால் சிவப்பைப் பார்த்தவுடனேயே ஏதோ ஆபத்து என்பதைப்போல நமக்கு ஒரு அச்சம் இருக்கிறது. அந்த அச்சம் வளர்ந்து செவ்வாய் தோஷம் என்பது வரைக்கும் வந்து நிற்கிறது.

செவ்வாய் தோஷம் என்பதற்கு ஜோதிடர்கள் தருகிற விளக்கம் என்ன என்றால் சிம்மராசியில், லக்கனத்தில், சந்திரனில் இதுபோன்ற வீடுகளில் செவ்வாய்க் கிரகம் இருக்குமானால், அது செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம். அப்படிப் பார்த்தால் 100க்கு 50பேருக்குச் செவ்வாய் தோஷம் இருக்கும். எனவே அதிலிருந்து சில சலுகைகள், சில தளர்ச்சிகள் வழங்கப்படுகின்றன. அப்படி அந்தச் செவ்வாய் இருந்தாலும்கூட, செவ்வாயோடு உடன் சேர்ந்து ராகு அல்லது கேது, குரு, சனி, சூரியன் என்னும் ஐந்து கிரகங்களிலே ஒன்று சேர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை என்று விலக்கி விடலாம். அப்படி விலக்கி விட்டதற்குப் பிறகும், 100க்கு 8.5 சதவீதம் பேருக்கு, அதாவது ஒரு நாளின் 24 மணி நேரத்தில், குறிப்பிட்ட 2 மணி நேரம் பிறக்கிற குழந்தைகள் எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் இருக்கும் என்பதுதான் ஜோதிடர்கள் தருகிற செய்தி.

அப்படிப் பார்த்தால், இந்தியாவில் ஒரு நிமிடத்திற்கு 30 பிள்ளைகள் பிறக்கிறார்கள். அது இன்றைக்குக் கொஞ்சம் கூடுதலாக ஆகியிருக்கலாம் அல்லது ஒன்று இரண்டு குறைந்திருக்கலாம். ஒரு நிமிடத்திற்கு 30 குழந்தைகள் என்று சொன்னால் ஒரு மணி நேரத்திற்கு 1800 குழந்தைகள் பிறக்கிறார்கள். 2 மணி நேரத்திற்கு 3600 குழந்தைகள் பிறக்கிறார்கள். எனவே ஒவ்வொரு நாளும் 3600 குழந்தைகள் செவ்வாய் தோஷத்தோடு பிறக்கிறார்கள் என்பதாக ஆய்வுகள் விளக்குகின்றன. அவர்களுள் ஏறத்தாழ 1800 குழந்தைகள் பெண்களாக இருக்க வாய்ப்பு உண்டு. அத்தனை குழந்தைகளும் செவ்வாய் தோஷச் சிக்கலினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள்.

செவ்வாய் எங்கே இருக்கிறது? பூமியிலே இருந்து 93 லட்சம் மைல்களுக்கு அப்பாலே இருக்கிறது. அதுதான் இருக்கிற கோள்களிலேயே நமக்குப் பக்கத்திலே இருக்கிற கோள். சூரியனுக்கும் நமக்கும் இடையில் புதன், வெள்ளி என்கிற இரண்டு கோள்கள் இருக்கின்றன. சூரியனுக்கு எதிர்த்திசையில் நமக்கு அடுத்ததாக இருப்பது செவ்வாய்தான். அடுத்த கிரகம் என்றாலும்கூட அது 93 லட்சம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறது. ஒரு ராக்கெட் 1000 கி.மீ. வேகம் என்று வைத்துக் கொண்டு போனாலும், அந்த இடத்தைப் போய் அடைவதற்கு ஏறத்தாழ 216 நாட்கள் ஆகும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அவ்வளவு தொலைவாக இருக்கிற ஒரு கிரகம், இந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து, பெண்ணின் மாமியாரையும் கண்டுபிடித்து, குறிபார்த்துக் கொன்றுவிடும் என்று சொல்வது அறிவியல் உலகில் எப்படி நம்பத் தகுந்தது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மேலை நாடுகளிலே செவ்வாய் பற்றிய அச்சம் இருந்தாலும்கூட, செவ்வாய் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 1960களிலே இருந்து செவ்வாயைப் பற்றி அறிவதற்கு அறிவியல் உலகம் முயன்று கொண்டிருக்கிறது. அங்குத் தண்ணீர் இருக்கிறதா அல்லது உயிர்கள், மனிதர்கள் வாழ்வதற்கு உரிய சூழல் இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். 1965 ஆவது ஆண்டுதான் முதல் முதலாக அமெரிக்க அனுப்பிய அந்த ஏவுகணை ஏறத்தாழ செவ்வாய்க்கு அருகிலே போய் 22 படங்களை எடுத்து அனுப்பியது. அதுதான் செவ்வாய் பற்றிய முதல் தகவல்.

22 படங்களை அந்தக் கலம் அனுப்பியது. அதற்குப் பிறகு பலமுறை முயன்று, திரும்பத் திரும்பத் தோல்விகளைக் கண்டதற்குப் பிறகு அதாவது சந்திரனில் கால் வைத்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1976 லே தான் முதன் முதலாக ஏவுகணை அங்கே போய் இறங்கிற்று. அதுவும் ஆளில்லாத ஒன்றுதான். ஆனால் இன்றுவரை மனிதர்கள் அங்கே போய் இறங்கவில்லை. நிலவிலே மட்டும்தான் மனிதன் கால் வைத்திருக்கிறான். செவ்வாயிலே அந்தக் கலம் மட்டும்தான் ஆளில்லாமல் போய் இறங்கியது 1976 இல்.

இரண்டு விண்கலங்கள் இறங்கி ஏறத்தாழ 1 லட்சம் படங்களை எடுத்து அனுப்பியிருக்கின்றன. இப்போது அந்தப் படங்களை இணைய தளங்களிலேகூட பார்க்க முடிகிறது. மிகப்பெரிய பள்ளத்தாக்குகள், குகை போன்ற பள்ளங்கள், இந்தியாவிலே இருக்கிற இமயமலையைக் காட்டிலும் பெரிய மலைகள், இப்படியெல்லாம் இருக்கிற ஒரு கிரகம்தான் அங்கே இருக்கிறது. அந்தக் கிரகத்துக்கும் நம்முடைய திருமணத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்க முடியாது என்கிற தெளிவு நமக்கு வருமானால், இந்த செவ்வாய் தோஷம் போன்றவற்றை எண்ணி நாம் அச்சப்பட வேண்டியதில்லை.

புதிய திருப்பம் என்ன என்றால் நம்முடைய நம்பிக்கைகளுக்கு அறிவியலைக் கொண்டு வந்து சேர்த்து முடிச்சுப் போட்டுச் சொல்வது. நாம் நம்முடைய ரத்தத்தைச் சோதனை செய்கிறபோது கீட.Nஞுஞ்ச்tடிதிஞு, கீட.கணிண்டிtடிதிஞு என்று சொல்வார்கள். ரத்தத்தில் யாருக்கெல்லாம் ஆர்.எச். இல்லையோ அவர்களுக்கு எல்லாம் செவ்வாய் தோஷம் என்கிறார்கள். பொதுவாக அறிவியலிலே ஒரு செய்தி உண்டு. ரத்தத்தில் ஆர்.எச். கணவன்–மனைவி இருவருக்கும் இருக்க வேண்டும். இல்லையென்றால் இருவருக்கும் ஆர்.எச். இருக்கக் கூடாது. அதை இப்போது மாற்றிக்கொள்வதற்காக, ஊசிகள் எல்லாம் வந்து விட்டன என்பதை நாம் அறிவோம்.

அதையும் இதையும் முடிச்சுப் போட்டுச் சொல்வதைக்கூட அண்மையிலே பல ஆராய்ச்சிகள் மூலம் விளக்கி இருக்கிறார்கள். ஏறத்தாழ 100 பேரை ஆராய்ந்து பார்த்தால், அதாவது ஜாதகப்படி செவ்வாய் தோஷம் இருக்கிறவர்கள் ஆர்.எச். நெகட்டிவாக இருக்கிறார்களா என்று பார்த்தால், 98.4 சதவீதம் அப்படி இல்லை. 1.6 சதவீதம் அப்படி இருக்கிறது என்றால் அது தன்னிச்சையாக நடந்திருக்கிறது என்பதுதான் பொருள். ஆகையினாலே இது அறிவியல் சார்ந்த செய்தி இல்லை. செவ்வாய் தோஷம் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை. அப்படிப்பட்ட ஒன்றை வைத்துக் கொண்டு நம்முடைய பெண்களின் வாழ்க்கையை நாம் பாழடித்து விடக்கூடாது. சு.ப.வீ .அவர்கள் பேச்சு .நன்றி

Thursday, 26 September 2013

திருமணத்தில் புரோகித பார்ப்பான் சொல்லும் மந்திரத்தின் தமிழாக்கம்


Photo: நீங்கள் நடத்தும் திருமணத்தில் புரோகித பார்ப்பான் சொல்லும் மந்திரத்தின் தமிழாக்கம் இதோ பாருங்கள் பின்பு  பகுத்தறிவு பெறுங்கள் 

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.


ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59) 

இனிமேலும் இந்த சாஸ்திரம்  சடங்குகள்  மற்றும் மந்திரங்கள் தேவையா தமிழர்களே சிந்தியுங்கள் ?
நீங்கள் நடத்தும் திருமணத்தில் புரோகித பார்ப்பான் சொல்லும் மந்திரத்தின் தமிழாக்கம் இதோ பாருங்கள் பின்பு பகுத்தறிவு பெறுங்கள்

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த ம...ணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.


ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59)

இனிமேலும் இந்த சாஸ்திரம் சடங்குகள் மற்றும் மந்திரங்கள் தேவையா தமிழர்களே சிந்தியுங்கள்

Sunday, 8 September 2013

விநாயகர் வரலாறு

நண்பர்களே!

பிள்ளையார் பிறந்தது எப்படி ? விநாயகர் வரலாறு அசிங்கமும், ஆபாசமும் நிறைந்தது என்பதும் தமிழின அறிவிற்கும் பண்பாட்டுக்கும் ஒரு போதும் ஒத்து...வராத ஒரு வெத்து விழா என்பதும் நம்மில் யாருக்கு தெரியும்?

பிள்ளையார் பற்றிய கற்பனைக் கதையை விளக்க வேண்டியது இந்த நவீன காலத்திலும் அவசியம். நமக்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட உண்மையை உணர்ந்தபின், பிள்ளையார் கடவுள்தானா? என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

தமிழரின் (இந்து) சைவ மதத்தில் விநாயகரே கிடையாது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தளகர்த்தன் என்ற பார்ப்பனன் தான் முதன் முதலில் பிள்ளையார் வழிபாட்டை, வாதாபியிலிருந்து இறக்குமதி செய்து தமிழர்கள் தமிழ் நாட்டில் புகுத்தினான். இந்தப் பிள்ளையார் பிறப்புக்கு பல கதைகள் உண்டு. (கடவுள் என்றாலே யாரும் கேள்வி கேட்க மாட்டார்களே!)

விநாயகன், விக்னேசுவரன், கணபதி, கணேசன் என்றெல்லாம் சொல்லப்படும் பிள்ளையாரின் பிறந்தநாள் பிள்ளையார் சதுர்த்தி ஆகும். எப்படி இந்த பிறந்த நாளைக் கண்டறிந்தார்கள் என்பதே விளங்கவில்லை (யாரும் கேள்வி கேட்கவும் கூடாது).
முதலில் பிள்ளையார் எப்படி பிறந்தார் என்பதை அவர்கள் சொல்வதை வைத்தே காண்போம் !

சிவ மகாபுராணத்தில் கூறப்பட்ட கதைச் சுருக்கம் இது:

பார்வதியுடன் (சிவனின் மனைவி) பேசிக் கொண்டிருந்த அவள் தோழி விஜயை என்பவள் உங்கள் கணவருக்கு மட்டும் ஏராளமான வேலைக்காரர்கள் (கணங்கள்) இருக்கும்போது - உங்களுக்கு யாருமே இல்லையே என்று கேட்டாளாம் ! அவள் தன் உடலிலிருந்து அழுக்கைத் திரட்டி எடுத்து மூன்று கண்களும் உடைய உருவத்தை உண்டாக்கிக் காவலுக்கு வைத்துவிட்டுக் குளிக்கப் போனாராம்.

பார்வதி குளிப்பதை பார்த்து காமமுற்ற வந்த சிவன் உள்ளே போக முயல, அழுக்கு உண்ண்டைக் கணபதி தடுத்ததாம். நான்தான் சிவன் எனக் கூறிக் கொண்டே உள்ளே போக முயல, கோவம் கொண்ட அழுக்கு உருண்டை தன் தண்டாயுதத்தால் சிவனை அடித்துவிட்டது. பதிலுக்கு சிவன் அடியாட்களை அனுப்ப அவர்களையும் அடித்து விரட்டிவிட்டது. சிவனுக்கு ஈகோ கிளம்பி, சூலாயுதத்தால் அழுக்குருண்டையின் (பிள்ளையாரின்) தலையை வெட்டிவிட்டார். இதை கண்டு பார்வதி அழுதுபுரளவே, வடக்கே தலை வைத்து படுத்திருந்த ஒரு கொம்பு உள்ள யானைக் குட்டியின் தலையைவெட்டி வந்து வந்து பிள்ளையாரின் உடலோடு ஒட்டியவுடன் அந்த உடலுக்கு உயிர் வந்து விட்டது. அவர்தான் இந்தப் பிள்ளையார் என்கிறது சிவபுராணம்.

ஒருகட்டத்தில் தன் தாயின் (பார்வதி) அழகில் மயங்கி அவரையே மனைவியாகக் கேட்டாராம் பிள்ளையார். இதனால் இவருக்கு பெண்கிடைக்க வில்லையாம். இவரின் இந்த விநாயகன் பிரம்மச்சாரி என்று ஒரு கதை. சித்தி, புத்தி என்று இரு மனைவிகள் உண்டு என்று இன்னொரு கதை. எதை நம்புவது? பிறப்பு -இறப்பு இல்லாதவன் கடவுள் என்று சொல்லுவார்கள். ஆனால் பிள்ளையாருக்கு ?

உண்மையிலே இப்படி ஒரு கடவுள் இருந்தது என்றால், ஏன் இப்படி முரண்பாடான கதைகளைச் சொல்கின்றன புராணங்கள்? உண்மையில் ஏழை எளிய மக்களை பக்தி என்னும் பெயரில் புராண புரட்டுகளை இட்டு கட்டி காசுபார்க்க பார்ப்பனர்கள் திரித்த கட்டுக் கதையே பிள்ளையார்.


இந்தப் பிள்ளையாரின் பெயரால் களிமண் சிலை செய்து தெருவுக்கு தெரு பிரமாண்ட சிலைவைத்து , அபிஷேகம் என்னும் பெயரில் பால், நெய் போன்றவற்றை குடம் குடமாக ஊற்றி படையலிட்டு மூன்றாம் நாள் தூக்கிப் போய் கடலிலே உடைத்து வீசுவதற்கு ஒரு விழா..

மதவெறியை பரப்பி வெற்றுக் கூச்சலிட்டு பஜனை பாட ஒரு கூட்டம்.

ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்!

கடவுளுக்கு ஏன் மனைவியின் தேவை? பார்வதிதன் காவலுக்கு வைத்த அழுக்கை கடவுள் என்பதா?

மனைவி குளிப்பதை பார்த்து சிவனுக்கு காமம் வந்தது ஏன்? கடவுளுக்கு ஆண் பெண் உணர்ச்சி எப்படி வரும்?
எல்லாம் வல்ல சிவனை அழுக்குருண்டை அடித்து விரட்டியது எப்படி? எல்லாம் வல்ல சிவன் ஏன் அடி ஆள்களை அனுப்ப வேண்டும்? அழுக்குருண்டையின் தலையை வெட்ட வேண்டும்? வெட்டப்பட்ட தலையை மந்திரம் ஓதி ஒட்ட வேண்டியதுதானே ! யானைத் தலையைதான் ஒட்ட வேண்டியதன் காரணம் என்ன?

சிறிய குழந்தையின் உடம்புக்கு - பத்து அடி நீளமுள்ள யானையின் தலை பொருந்துமா? தலைவேறாக உடல் வேறாக வெட்டிய பிறகு, ஒட்டி வைத்தால் உயிர் பிழைக்க முடியுமா? யானையின் உருவத்தோடு எந்தவொரு பெண்ணுக்காவது குழந்தை பிறக்க முடியுமா?

தன்னுடைய அம்மா பார்வதியை போலவே தனக்கு அழகான பெண் வேணும்னு சொன்ன பிள்ளையார்தான் குழந்தைகள் வழிபட வேண்டிய தெய்வமா?

பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், உயிர் கொடுத்ததாகவும் உள்ளபோது பிள்ளையார் எப்படி சக்தி உள்ள கடவுள் என்பது ?

எந்த விதத்திலும் தமிழர்களோடு ஒத்துப் போகாத மார்வாடி குசராத்தி சேட்டுகள் லட்சக் கணக்கில் செலவிட்டு விதத்திலும் விநாயகர் சதுர்த்தியை மட்டும் கொண்டாடுவது ஏன்?
ஆயிரம் கடவுள் இருந்தும் மார்வாடி குசராத்தி சேட்டுகளின் வீடுகளில் கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களில் பிள்ளையார் மட்டும் இருப்பதன் பின்னனி என்ன?

நம் முன்னோர்களால் கலை நயத்துடனும் வரலாற்று சிறப்புடனும் கட்டப்பட்ட கோயில்கள் இருக்க லட்சக் கணக்கான விநாயகர் கோயில்கள் மட்டும் தமிழ் நாட்டில் தெருவுக்கு தெரு புதிது புதிதாக முளைத்ததின் பின்னணி என்ன?

இலைப் பிள்ளையார் தொடங்கி ரோபட் பிள்ளையார், ரெஸ் கார் பிள்ளையார் என பல்லாயிரக்கணக்கான பிள்ளையார்கள் தோன்றியது எப்படி?

நண்பர்களே!
ஆபாசம், திருட்டு, கொலை, ஏமாற்று போன்றவை நிரம்பி வழியும் புராணக் கதைகளை நம்பி புத்தியை இழப்பது அறியாமை செயல்தானே! இது போன்ற புரட்டுகளின் பின்னால் கோஷம் போட்டு குதிப்பது அறிவுடையவர்கள் ஏற்கக் கூடிய செயல் தானா !

பக்தி என்னும் பெயரில் மனிதரை இழிவு படுத்தும் மடமையை எதிர்த்து மான உணர்ச்சி கொள்வோம்!
ஏன் எதற்கு எப்படி என்னும் பகுத்தறிவை மக்களுக்கு புகட்டுவோம்.!
தமிழர் பண்பாட்டையும், கடவுள் நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கி ஆபாசக் கதைகளை
புகுத்தி இழிவு செய்யும் மார்வாடி குசராத்தி சேட்டுகளின் பண்டிகைகளை விரட்டுவோம்!

மக்கள் தங்கள் உரிமைக்காகவும், அநீதிகளுக்கு எதிராகவும் வீதிக்கு திரளும் மனப்பாண்மையை மாற்றி வெறும் வெற்றுக் கூச்சல் சம்பிராதாய ஊர்வலமாக்கும் வினாயகர் ஊர்வலத்தை புறக்கணிப்போம்.!

மனிதனின் அறிவு , ஆற்றல், நேரம் அனைத்தும் நம்முடைய சமுதாய வளர்ச்சிக்காகவே செலவிடப்பட வேண்டும். மக்களின் மனக்கஷ்டத்தையும், அறியாமையையும் பயன்படுத்திக் கொண்டு மத வெறியை கிளப்பி பணம், பொருள், நேரம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை விரையமாக்கி கொண்டாடப்படும் போலி விழாக்களை புறக்கணிப்போம்!
மண்ணுக்கும் மனிதர்களுக்கும் நன்றி செலுத்தும் மறைக்கப்பட்ட
தமிழர் விழாக்களை முன்னெடுப்போம் !

Friday, 30 November 2012

மனுதர்ம சாஸ்திரமும் தமிழ் மன்னர்களும் - ஆ. சிவசுப்பிரமணியன்


 


வடமொழியில் தர்ம சூத்திரங்கள், தர்ம சாஸ்திரங்கள் என்பவை சட்ட நூல்களாகும். இந்நூல்கள் செய்யுள் வடிவுக்கு மாறிய பின்னர் அவை ஸ்மிருதிகள் எனப் பெயர் பெற்றன. இவற்றின் எண்ணிக்கை 128 என்று கானே என்ற வடமொழி அறிஞர் குறிப்பிடுவார். இவை அனைத்திலும் பரவலாக அறிமுகமான ஸ்மிருதி ‘மனுஸம்ஹிதை’, ‘மாணவ தர்ம சாஸ்திரம்’ என்றழைக்கப்படும் மனுதர்ம சாஸ்திரமாகும்.

 

மனுவின் காலம்

 

மனு என்பவர் எழுதியதால் இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறினாலும் இந்நூலாசிரியரின் பெயர் சுமதி பார்கவா என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இந்நூலின் காலம் கி.மு.200க்கும் கி.பி.200க்கும் இடைப்பட்டது என்று பூக்லர் என்பவரும், கி.மு.170க்கும் 150க்கும் இடைப்பட்டது என்று அம்பேத்கரும் கருதுகின்றனர். கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இந்நூல் இறுதி வடிவம் பெற்றதாக ஆர்.எஸ். சர்மா கருதுகிறார். எப்படியாயினும் மன்னர்களின் பிராமணியச் சார்புக்கான சட்ட நூலாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை.

 

மனுதர்மம் உருவான வரலாற்றுச் சூழல்

 

மௌரியப் பேரரசின் படைத் தலைவனாக இருந்த புஷ்யமித்திரன் என்ற சாமவேதப் பிராமணன் நம்பிக்கைத் துரோகம் செய்து, மௌரிய மன்னனைக் கொலை செய்துவிட்டு சுங்க வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தான். இதன் பின்னர் பௌத்தம் கொடூரமான முறையில் ஒழிக்கப்பட்டது. கொலை செய்யப்படும் ஒவ்வொரு பௌத்த துறவியின் தலைக்கும் நூறு பொற்காசுகளை அவன் வழங்கினான். அசோகன் காலத்திலிருந்து தடை செய்யப்பட்டிருந்த வேதவேள்விகள் பெருகின. அத்துடன் வர்ணமுறை சாதியாக மாற்றப்பட்டது. இக்கால கட்டத்தில்தான் பிராமணர்களை, தெய்வநிலைக்கு உயர்த்திப் பாதுகாக்கும் மனுதர்மம் உருவாகியுள்ளது.

 

மனு செய்த கொடுமை

 

நான்கு வர்ண அமைப்பானது, இறுக்கமான ஒன்றாக மனுவுக்கு முன்னர் இருக்கவில்லை. வருணம் என்பது மாற்றிக்கொள்ளத்தக்கதாக நெகிழ்ச்சியுடன் இருந்தது. ஆனால் இதை இறுக்கமான சட்டங்களாக மனு மாற்றியதுடன், நான்கு வருணங்களுக்கு அப்பால் ‘அவருணர்கள்’ (வருணமற்றவர்கள்) என்ற புதிய பிரிவை உருவாக்கி, ‘சண்டாளர்கள்’ என்ற பெயரையும் அதற்குச் சூட்டி, தீண்டாமை என்ற கொடுமையை இப்புதிய பிரிவின் மீது சுமத்தினான்.

 

தமிழ்நாட்டில் மனுதர்மம்

 

தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசு உருவான பின்னர், மனுதர்மத்தின் இறுக்கமான சாதியப் பாகுபாடுகள் நுழைந்துவிட்டன. பல்லவர் காலச் செப்பேடுகளில் இடம் பெற்றுள்ள வடமொழி ஸ்லோகங்கள், சலுகை பெற்ற பிரிவாகப் பிராமணர்கள் உருவாகிவிட்டதைச் சுட்டுகின்றன. சோழப் பேரரசிலும், பிற்காலப் பாண்டியர் ஆட்சிக்காலத்திலும் இது மேலும் வளர்ச்சி பெற்றது.

 

‘அறநெறி வளர, மனுநெறி திகழ’

‘மறைநெறி வளர மனுநெறி திகழ’

‘மனுநீதி முறை வளர’

‘மனுநீதி தழைத் தோங்க’

‘மன்னுயிர் தழைப்ப மனுவாறு விளங்க’

‘மனுவாறு பெருக’

என்றெல்லாம் தமிழ் மன்னர்களின் மெய்க்கீர்த்திகளில் இடம் பெறும் தொடர்கள் அவர்கள் எந்த அளவுக்கு, மனு ஸ்மிருதியைச் சார்ந்து நின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.

 

பதிமூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த திருக்குறள் உரையாசிரியர் பரிமேலழகர், அறம், ஒழுக்கம் என்பன குறித்து வரையறை செய்ய முற்படும்போது ‘அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் ஆம். ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமச்சரியம் முதலிய நிலைகளினின்று அவ்வவற்றிற் கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்’ என்று குறிப்பிடுகிறார்.

 

பாண்டியர் காலக் கல்வெட்டொன்று. (கி.பி.1263), பிராமணர்கள் ஐவர், அடாத செயல்கள் செய்தபோது, அவர்களை எவ்வாறு தண்டிக்க வேண்டும் என்பதை, ‘கீழ் சாதிகளைத்தண்டிக்கும் முறைமைகளிலே’ என்று குறிப்பிடுகிறது. சாதியின் அடிப்படையிலேயே நீதி வழங்கப்பட்டதை இதன் மூலம் அறியமுடிகிறது.

 

எல்லாவற்றிற்கும் மேலாகக் கல்வி என்பது வேதக் கல்வியாகி, அதைப் பயிலவும் பயிற்றுவிக்கவும் மன்னர்கள் மானியம் வழங்கினர். இக்கல்வியைக் கற்பிக்கும் உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உரியது. சத்திரியரும், வைசியரும் கற்பதற்கு மட்டுமே உரிமையுடையவர். இதன் விளைவாக உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்த சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் பிரிவுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.

 

‘இம்மைப் பயன்தரும் கல்வியைச் சூத்திரர்களுக்குக் கற்றுக் கொடுக்கக்கூடாது’ என்று மனு நெறியானது கல்வியறிவு பெறுவதிலிருந்து அடித்தள மக்களை விலக்கி வைத்தது. ஆயினும் சூத்திரர் பிரிவைச் சேர்ந்தவர்களும் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பிரிவினரும், ‘செவி வாயாக நெஞ்சுகளனாகக்’ கொண்டு பாரம்பரிய தொழில் நுட்பத்தை மனதில் நிலை நிறுத்திக் கொண்டதுடன், வாய்மொழி வழக்காறுகளாக அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் சென்றனர். இதன் விளைவாகத்தான் தமிழ் உரைநடையானது வளர்ச்சியுறாத தேக்க நிலையை அடைந்தது. நினைவிலிருத்திக் கொள்ள எளிதாய் இருக்கும் என்பதால்தான் நமது சித்தவைத்திய நூல்களும், தச்சு வேலை, கப்பல் கட்டுதல் தொடர்பான நூல்களும் செய்யுள் வடிவில் அமைந்தன.

 

ஏட்டுக் கல்வி மறுக்கப்பட்ட இம்மக்கள்தான் கவின்மிகு கோயில்களையும், வலுவான அணைகளையும், ஏரிகளையும் அன்றாடம் புழங்கும் பொருள்களையும், உணவு தானியங்களையும் தமிழ்ச் சமுதாயத்திற்கு வழங்கினர். சமூகத்தின் நிதியுதவியுடன் கல்வி கற்ற மேட்டிமையோர் சமூக நலனுக்காக எதையும் மேற்கொள்ளவில்லை. ஆனாலும் அவர்கள் ‘மாமனிதர்களாக’ காட்சியளித்தனர்.

 

மனுவின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் இடம்பெற்றிருக்காவிட்டால், எண்ணும் எழுத்தும் சார்ந்த ஏட்டுக்கல்வியும், தொழில் நுட்பம் சார்ந்த அனுபவ அறிவும் இணைந்து செயல்பட்டிருக்கும். உடல் உழைப்பை இழிவானதாகவும், ஏட்டுக்கல்வியை உயர்வானதாகவும் கருதும்போக்கு உருவாகியிருக்காது. இதனால் இம்மண் சார்ந்த அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்து நமக்கான ஒரு நவீனக் கல்வி உருப்பெற்றிருக்கும்.

 

நன்றி - கீற்று

http://www.keetru.com/vizhi/jan08/sivasubramanaian.php