Thursday 12 June 2014

உலகில் மதங்கள் ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும்-பெரியார்

உலகில் மதங்கள் ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும்-பெரியார்
 (முஸ்லீம் மதத்தை பெரியார் ஆதாரித்தாரா? என்பது பற்றி முகநூல் மற்றும் பல இடங்களில் விவாதிக்கபட்டுக் கொண்டிருக்கிறது. அது பற்றி பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து பெரியார் என்ன சொல்லியுள்ளார் என்று தேடியதில் கிடைத்த செய்தியை உள்ளது உள்ளபடி அப்படியே பதிவு செய்து உள்ளோம். வினா? நம்முடையது, விடை:- பெரியாருடையது. ஊன்றிப்படித்து உண்மையை உணருங்கள். 

வினா:-

அய்யா,மதங்கள் அனைத்தும் ஒழிய வேண்டும் என்று சொல்லும் நீங்கள்,முகமதிய மதத்தை ஆதரிப்பது ஏன்?

விடை:-

இந்து மதத்தை விட முகமதிய மதம் மேலானதே! ஏனெனறால் அதில் ஒற்றுமை சமத்துவம், விக்கிரகாராதனை மறுப்பு ஆகியவைகள் இருக்கின்றன. அந்த மதம் இன்று துருக்கி, ஆப்கானிஸ்தானும் ஈஜிப்டு (எகிப்து)முதலிய நாடுகளை ஆட்சி கொண்டு வருகின்றது இவைகளையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கித் தள்ளுவதானாலும் இந்து வாயிருப்பதின் காரணத்தால்  தீண்டப்படதாவராகவும்,காணப்படாதவராகவும்,கடவுள் சந்நிதானத்தில் நிற்கப்படாதவராகவும் இருக்கின்ற ஆறறிவு படைத்து ஆண்டவனுடைய தூய திருக்கோயிலாக அடைய சரீரத்தைத் தாங்கி நிற்கும் ஒரு மனிதன் இந்து மதத்தை விட்டு முகம்மதிய மதம் புகுந்தானானால் அப்போதே சூரியனைக் கண்ட குமரி இருட்டு பறந்தோடுவது போல் மறைந்து போகின்றதென்பது மட்டும் உறுதி!உறுதி!!உறுதி!!!

இதையாராவது  மறுக்கின்றார்களா என்று கேட்கின்றோம். மற்றபடி  மேல்லோகமும் ஆண்டவன் சன்னிதானமும்; பாவமன்னிப்பும் இந்து மதத்தை விட முகமதிய மதத்தில் மிக்க சமீபமென்றோ மிக்க சுலபமென்றோ நாம் சிறிதும் ஒப்புக் கொள்வதில்லை. தவிர இந்து மதத்தில் இருக்கின்ற ஒரு சக்கிலியோ, பறையனோ,பள்ளனோ அன்றையதினம் இந்து மதத்தை விட்டு விட்டேன் என்று சொல்லுவானானால் அவை ஒருக்காலும் தொட்டுக்கொள்ளவோ,தெருவில் நடக்கவிடவோ பக்கத்தில் வர சம்மதிக்கவோ எவரும் ஒப்புக்கொள்வதில்லை. இந்த நிலையில் உள்ள மக்களிடம் தாழ்த்தப்பட்டவர்கள் மதத்தை விட்டு விடுவதனால் மாத்திரம் எப்படி சுதந்திரமடையக் கூடியவர்களாகி விடுவார்கள்?ஆனால் மகமதியர்களாகவோ கிறத்துவர்களாவோ ஆகிவிட்டால் கண்டிப்பாக சட்டத்தில் ஆட்சேபனை இல்லை என்பதுடன் சிறப்பாக மகம்மதியர்களாகி விட்டால் சட்டத்தில் ஆட்சேபனை இல்லாத்தோடு அனுபவத்திலும் ஆட்சேபனையில்லாமல் போய் விடுகின்றது.

பொதுவாக நமது இலட்சியம் சாதி மத வித்தியாசம் ஆகிய இரண்டும் ஒழிந்து அவைகளால் ஏற்படும் மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டுமென்பதாகும். மத வித்தியாசம் ஒழிகின்ற வரையிலும் சாதி வித்தியாசம் காத்துக் கொண்டிருக்க முடியாது. ஆதலால் மத வித்தியாசம் ஒழிய பாடுபட்டு கொண்டிருப்பதுடன் சாதி வித்தியாசம் ஒழியச் செய்ய வேண்டிய காரியங்களையும் கூட செய்து கொண்டுதான் இருக்க வேண்டி இருக்கிறது. ஆகவே அம்முயற்சியில் ஒன்றுதான் நாம் இப்போது மகமதிய மதத்தை தழுவியர்களை ஆதரிப்பதும்,பாராட்டுவதுமே ஒழிய வேறில்லை
                ------------------------- தந்தைபெரியார் -“குடிஅரசு”- “03-11-1929
**************************************************************************************
வினா:-


அய்யா,ஆதிதிராவிடர்களை, இஸ்லாம் மதத்தில் சேருங்கள் என்று தாங்கள் அறிவுரை சொன்னது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது? இது பற்றி தாங்கள் கருத்து என்ன?
விடை:-

ஆதிதிராவிடர்களை நான் இஸ்லாம் மத்தில் சேருங்கள் என்று சொன்னதிற்காக ஆனேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள்.அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை சொல்வதைச் கிரகிக்கச் சக்தியும் இல்லை சிலருக்குத் தங்கள் மேன்மை போய் விடுமே- தக்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல என்னவும் ஏனெனில் மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதிதிராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை, அல்லது ஆத்மார்த்தத்திற்கேர் கடவுளை அடைவதற்கோ நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதிதிராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது,சக்தியாகிரகம் செய்வதுபோலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்

இனியும் சொல்கின்றேன் சட்டம் செய்வது இஷ்டம்,செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம் செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம் இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கும் ஆனால் ஆதித்திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ, துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கும் ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் வித்தகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? யாருக்கும் எவ்விதக்  கஷ்டமும் இல்லாமல் வேண்டுமானால் எவ்வித மனமாறுதல் கூட இல்லாமல், தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் சொன்ன ஆசையும்  அவசரமும் பட்ட ஒரு மனிதன் மாலை 5 மணிக்கு இஸ்லாம் மதக் கொள்கையை ஏற்றுக் கொண்டதால் சொல்லி, 5-30 மணிக்கு தீண்டாதவன் என்கின்ற இழிலிருந்து மீண்டும் தெருவில் நடக்க உரிமைபெற்று மனிதனாவதில் என்ன மற்றவர்கள் ஆட்சேபிக்க  வேண்டும்? கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100-க்கு 90 மக்கள் என்னென்னமோ_ அவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருந்து இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும்.
------------------------தந்தைபெரியார் -“குடிஅரசு”-02-08-1931

நன்றி தமிழ் ஓவியா