Monday 13 April 2015

சித்திரை புத்தாண்டு புறட்டு வரலாறு:

நாரதருக்கு குடும்பம் நடத்தவேண்டும் என ஆசைவந்ததாம்,
நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் கிருஷ்ணருக்கே மனைவியாய் இருந்தனராம்.பெண்ணே கிடைக்கவில்லை என்றாராம்.
அதற்கு கிருஷ்ணர், தனது மனைவிகள் வசிக்கும் இல்லங்களுக்கு நேரில் சென்று அறிந்து வரும்படி கூறினார். அதன்படி கிருஷ்ணரின் மனைவிகள் வசிக்கும் ஆயிரக் கணக்கான வீடுகளுக்கும் நாரதர் சென்று பார்த்தார். அத்தனை வீடுகளிலும் ஸ்ரீ கிருஷ்ணர் தனது மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டு தானும் அதுபோல குடும்ப சுகத்தை அடைய வேண்டும் என்று விரும்பினார்.
அந்த எண்ணத்துடனே நாரதர் கங்கை நதியில் மூழ்கி நீராடினார். கிருஷ்ணரின் அருளால் அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. நீரில் மூழ்கி எழுந்த நாரதர் பெண்ணாக மாறி இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு அழகான சந்யாசி பெண்ணாக மாறிய நாரதரின் கையை பிடித்து அழைத்துக் சென்று திருமணம் செய்து கொண்டார்.
மண வாழ்க்கை கொஞ்சம் காலம்தான் மகிழ்ச்சியோடு சென்றது. பெண்ணாக மாறிய நாரதருக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு குழந்தை எனப் பிறந்து கொண்டிருந்தது. பெண்ணாக மாறியதால் இனி அவரை நாரதி என்று அழைப்போம். இதனால் உடல் நலம் குன்றியும் கவலையால் பீடிக்கப்பட்டும் நாரதி துன்பமுற்றாள்.
குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாமலும், நோய்க்கு மருந்தளிக்கவும் முடியாத நிலையும் ஏற்பட்டது. இப்படியே நாரதி 60 குழந்தைகளுக்கு தாயாகி விட்டார். இனியும் தாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது "குடும்ப வாழ்க்கை போதும், இதிலிருந்து என்னை விடுவியுங்கள்' என்று பகவான் கிருஷ்ணரை மனமார பிரார்த்தனை செய்தாள்.
நாரதியிடம், "பெண்ணே குடும்ப வாழ்கையின் சுகம் போதுமா? வேறு என்ன வேண்டும்?'' என்று வினவினார். அதற்கு நாரதர், ""மண வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கையென்று எண்ணி ஏமாந்து விட்டேன். என்னை இதிலிருந்து விடுவித்து உதவுங்கள்'' என்றார். அதுவரை நாரதரை மாயையில் ஆழ்த்தி இருந்த பகவான் அவரை மாயையில் இருந்து விடுவித்தார். நாரதியும் பழையபடி தம்புராவைச் சுமந்தபடி நாரதராக மாறினார்.
அப்போது நாரதர் சம்சாரக் கடலில் மூழ்கி இருந்த 60 வருடங்களில் அவருக்குப் பிறந்த 60 குழந்தைகளும் நாரதரைச் சுற்றி வந்து தங்களுக்கு ஏதாவது வழி செய்து விட்டு செல்லுங்கள் என்று கதறின. நாரதர் அவர்களை அமைதிப்படுத்த ஒரு வழி சொல்லுமாறு பகவான் விஷ்ணுவை வேண்டினார்.
அதற்கு பகவான், 60 பிள்ளைகளையும் 60 ஆண்டுகளாக இருந்து ஒவ்வொருவரும் ஓர் ஆண்டு இந்த பூவுலகை ஆண்டு சுகமாக வாழ்வார்கள் என அருளினார். அதன்படி "பிரபவ'வில் தொடங்கி "அக்க்ஷய'வில் முடியும் 60 குழந்தைகளும் வருடங்களாக மாற்றம் பெற்று பூவுலகை ஆட்சி செய்து வருகின்றனர்.
1.பிரபவ 2.விபவ 3.சுக்கில 4.பிரமோதூத 5.பிரஜோற்பதி 6.ஆங்கிரச 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவா 10.தாது 11.ஈஸ்வர 12.வெகுதான்ய 13.பிரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.சுபானு 18.தாரண 19.பார்த்திப 20.விய 21.ஸர்வசித்து 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வரி 35.பிலவ 36.சுபகிருது 37.சோபகிருது 38.குரோதிஷ 39.விஸ்வாஸுவ 40.பரபாவ 41.பிலவங்க 42.கீலக 43.ஸௌமிய 44.சாதாரண 45.விரோதிகிருது 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராஷச 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரௌத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்ரோத்காரி 58.ரக்தாஷி 59.குரோதன 60.அக்க்ஷய.
தமிழனை சிறுமைப்படுத்த எவ்வளவு கீழ்த்தரமான சிந்தனையுடன் இக்கதையை தினித்திருக்கிறார்கள்.
நாமும் கடைப்பிடிக்கிறோம்.
கேவலம் கேவலம்,
ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடத்தான் வேண்டுமா?
ஆரிய அடிமைத்தனத்தின் எச்சமே சித்திரை புத்தாண்டு.